نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1624 | 12 | 28 | فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم |
| | | (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே! |
|
1625 | 12 | 29 | يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين |
| | | (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார். |
|
1626 | 12 | 30 | وقال نسوة في المدينة امرأت العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين |
| | | அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள். |
|
1627 | 12 | 31 | فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم |
| | | அப் பெண்களின் பேச்சக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். "இப் பெண்கள் எதிரே செல்லும்" என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்; "அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள். |
|
1628 | 12 | 32 | قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين |
| | | அதற்கவள் "நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்ளோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்" என்று சொன்னாள். |
|
1629 | 12 | 33 | قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين |
| | | (அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். |
|
1630 | 12 | 34 | فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم |
| | | எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். |
|
1631 | 12 | 35 | ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين |
| | | (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது. |
|
1632 | 12 | 36 | ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين |
| | | அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). |
|
1633 | 12 | 37 | قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون |
| | | அதற்கு அவர் கூறினார்; "உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன். |
|