نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6070 | 92 | 12 | إن علينا للهدى |
| | | நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. |
|
6071 | 92 | 13 | وإن لنا للآخرة والأولى |
| | | அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும். |
|
6072 | 92 | 14 | فأنذرتكم نارا تلظى |
| | | ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். |
|
6073 | 92 | 15 | لا يصلاها إلا الأشقى |
| | | மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான். |
|
6074 | 92 | 16 | الذي كذب وتولى |
| | | எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான். |
|
6075 | 92 | 17 | وسيجنبها الأتقى |
| | | ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். |
|
6076 | 92 | 18 | الذي يؤتي ماله يتزكى |
| | | (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். |
|
6077 | 92 | 19 | وما لأحد عنده من نعمة تجزى |
| | | மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். |
|
6078 | 92 | 20 | إلا ابتغاء وجه ربه الأعلى |
| | | மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). |
|
6079 | 92 | 21 | ولسوف يرضى |
| | | வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார். |
|