نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5950 | 87 | 2 | الذي خلق فسوى |
| | | அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். |
|
5951 | 87 | 3 | والذي قدر فهدى |
| | | மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். |
|
5952 | 87 | 4 | والذي أخرج المرعى |
| | | அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான். |
|
5953 | 87 | 5 | فجعله غثاء أحوى |
| | | பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான். |
|
5954 | 87 | 6 | سنقرئك فلا تنسى |
| | | (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்- |
|
5955 | 87 | 7 | إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى |
| | | அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான். |
|
5956 | 87 | 8 | ونيسرك لليسرى |
| | | அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம். |
|
5957 | 87 | 9 | فذكر إن نفعت الذكرى |
| | | ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. |
|
5958 | 87 | 10 | سيذكر من يخشى |
| | | (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். |
|
5959 | 87 | 11 | ويتجنبها الأشقى |
| | | ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். |
|