نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5722 | 79 | 10 | يقولون أإنا لمردودون في الحافرة |
| | | "நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள். |
|
5723 | 79 | 11 | أإذا كنا عظاما نخرة |
| | | "மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?" |
|
5724 | 79 | 12 | قالوا تلك إذا كرة خاسرة |
| | | "அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள். |
|
5725 | 79 | 13 | فإنما هي زجرة واحدة |
| | | ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- |
|
5726 | 79 | 14 | فإذا هم بالساهرة |
| | | அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். |
|
5727 | 79 | 15 | هل أتاك حديث موسى |
| | | (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? |
|
5728 | 79 | 16 | إذ ناداه ربه بالواد المقدس طوى |
| | | 'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, |
|
5729 | 79 | 17 | اذهب إلى فرعون إنه طغى |
| | | "நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்." |
|
5730 | 79 | 18 | فقل هل لك إلى أن تزكى |
| | | இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும். |
|
5731 | 79 | 19 | وأهديك إلى ربك فتخشى |
| | | "அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). |
|