نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5480 | 73 | 5 | إنا سنلقي عليك قولا ثقيلا |
| | | நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். |
|
5481 | 73 | 6 | إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا |
| | | நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. |
|
5482 | 73 | 7 | إن لك في النهار سبحا طويلا |
| | | நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன. |
|
5483 | 73 | 8 | واذكر اسم ربك وتبتل إليه تبتيلا |
| | | எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக. |
|
5484 | 73 | 9 | رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا |
| | | (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக. |
|
5485 | 73 | 10 | واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا |
| | | அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக. |
|
5486 | 73 | 11 | وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا |
| | | என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக. |
|
5487 | 73 | 12 | إن لدينا أنكالا وجحيما |
| | | நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன. |
|
5488 | 73 | 13 | وطعاما ذا غصة وعذابا أليما |
| | | (தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன. |
|
5489 | 73 | 14 | يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا |
| | | அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். |
|