نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3948 | 37 | 160 | إلا عباد الله المخلصين |
| | | அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து. |
|
3949 | 37 | 161 | فإنكم وما تعبدون |
| | | ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும். |
|
3950 | 37 | 162 | ما أنتم عليه بفاتنين |
| | | (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது. |
|
3951 | 37 | 163 | إلا من هو صال الجحيم |
| | | நரகைச் சென்றடைபவர்களைத் தவிர. |
|
3952 | 37 | 164 | وما منا إلا له مقام معلوم |
| | | (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை." |
|
3953 | 37 | 165 | وإنا لنحن الصافون |
| | | "நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்). |
|
3954 | 37 | 166 | وإنا لنحن المسبحون |
| | | "மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்." |
|
3955 | 37 | 167 | وإن كانوا ليقولون |
| | | (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்; |
|
3956 | 37 | 168 | لو أن عندنا ذكرا من الأولين |
| | | "முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் - |
|
3957 | 37 | 169 | لكنا عباد الله المخلصين |
| | | "அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று. |
|