نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3940 | 37 | 152 | ولد الله وإنهم لكاذبون |
| | | "அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்" (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே! |
|
3941 | 37 | 153 | أصطفى البنات على البنين |
| | | (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? |
|
3942 | 37 | 154 | ما لكم كيف تحكمون |
| | | உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்? |
|
3943 | 37 | 155 | أفلا تذكرون |
| | | நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? |
|
3944 | 37 | 156 | أم لكم سلطان مبين |
| | | அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? |
|
3945 | 37 | 157 | فأتوا بكتابكم إن كنتم صادقين |
| | | நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள். |
|
3946 | 37 | 158 | وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون |
| | | அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். |
|
3947 | 37 | 159 | سبحان الله عما يصفون |
| | | எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன். |
|
3948 | 37 | 160 | إلا عباد الله المخلصين |
| | | அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து. |
|
3949 | 37 | 161 | فإنكم وما تعبدون |
| | | ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும். |
|