نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3226 | 27 | 67 | وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون |
| | | மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்; "நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா? |
|
3227 | 27 | 68 | لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين |
| | | நிச்சயமாக, இ(ந்த அச்சறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டடே வருகிறது இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" (என்றுங் கூறுகின்றனர்). |
|
3228 | 27 | 69 | قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين |
| | | "பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்" என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. |
|
3229 | 27 | 70 | ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون |
| | | அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம். |
|
3230 | 27 | 71 | ويقولون متى هذا الوعد إن كنتم صادقين |
| | | இன்னும்; "நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)" என்றும் அவர்கள் கேட்கிறார்கள். |
|
3231 | 27 | 72 | قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون |
| | | "நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்" என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக. |
|
3232 | 27 | 73 | وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون |
| | | இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. |
|
3233 | 27 | 74 | وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون |
| | | மேலும்; அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். |
|
3234 | 27 | 75 | وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين |
| | | வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. |
|
3235 | 27 | 76 | إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون |
| | | நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது. |
|