نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3018 | 26 | 86 | واغفر لأبي إنه كان من الضالين |
| | | "என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்." |
|
3019 | 26 | 87 | ولا تخزني يوم يبعثون |
| | | "இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!" |
|
3020 | 26 | 88 | يوم لا ينفع مال ولا بنون |
| | | "அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா." |
|
3021 | 26 | 89 | إلا من أتى الله بقلب سليم |
| | | "எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)." |
|
3022 | 26 | 90 | وأزلفت الجنة للمتقين |
| | | "பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்." |
|
3023 | 26 | 91 | وبرزت الجحيم للغاوين |
| | | "வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்." |
|
3024 | 26 | 92 | وقيل لهم أين ما كنتم تعبدون |
| | | "இன்னும், அவர்களிடம் கூறப்படும்; "நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?" என்று. |
|
3025 | 26 | 93 | من دون الله هل ينصرونكم أو ينتصرون |
| | | "அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா," |
|
3026 | 26 | 94 | فكبكبوا فيها هم والغاوون |
| | | பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் - |
|
3027 | 26 | 95 | وجنود إبليس أجمعون |
| | | "இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்)." |
|