نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2493 | 21 | 10 | لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون |
| | | உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? |
|
2494 | 21 | 11 | وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين |
| | | மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம். |
|
2495 | 21 | 12 | فلما أحسوا بأسنا إذا هم منها يركضون |
| | | ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள். |
|
2496 | 21 | 13 | لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون |
| | | "விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக" (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது). |
|
2497 | 21 | 14 | قالوا يا ويلنا إنا كنا ظالمين |
| | | (இதற்கு அவர்கள்) "எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று வருந்திக் கூறினார்கள். |
|
2498 | 21 | 15 | فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين |
| | | அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை. |
|
2499 | 21 | 16 | وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين |
| | | மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை. |
|
2500 | 21 | 17 | لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين |
| | | வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். |
|
2501 | 21 | 18 | بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون |
| | | அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். |
|
2502 | 21 | 19 | وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون |
| | | வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள். |
|