نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
1817 | 15 | 15 | لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون |
| | | "நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். |
|
1818 | 15 | 16 | ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين |
| | | வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். |
|
1819 | 15 | 17 | وحفظناها من كل شيطان رجيم |
| | | விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம். |
|
1820 | 15 | 18 | إلا من استرق السمع فأتبعه شهاب مبين |
| | | திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும். |
|
1821 | 15 | 19 | والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون |
| | | பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். |
|
1822 | 15 | 20 | وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين |
| | | நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம். |
|
1823 | 15 | 21 | وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم |
| | | ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை. |
|
1824 | 15 | 22 | وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين |
| | | இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. |
|
1825 | 15 | 23 | وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون |
| | | நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். |
|
1826 | 15 | 24 | ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين |
| | | உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம். |
|