نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6217 | 111 | 1 | بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب |
| | | அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். |
|
6218 | 111 | 2 | ما أغنى عنه ماله وما كسب |
| | | அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. |
|
6219 | 111 | 3 | سيصلى نارا ذات لهب |
| | | விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். |
|
6220 | 111 | 4 | وامرأته حمالة الحطب |
| | | விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, |
|
6221 | 111 | 5 | في جيدها حبل من مسد |
| | | அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). |
|
6222 | 112 | 1 | بسم الله الرحمن الرحيم قل هو الله أحد |
| | | (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. |
|
6223 | 112 | 2 | الله الصمد |
| | | அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். |
|
6224 | 112 | 3 | لم يلد ولم يولد |
| | | அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. |
|
6225 | 112 | 4 | ولم يكن له كفوا أحد |
| | | அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. |
|
6226 | 113 | 1 | بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق |
| | | (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். |
|