نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6001 | 89 | 8 | التي لم يخلق مثلها في البلاد |
| | | அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. |
|
6002 | 89 | 9 | وثمود الذين جابوا الصخر بالواد |
| | | பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) |
|
6003 | 89 | 10 | وفرعون ذي الأوتاد |
| | | மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) |
|
6004 | 89 | 11 | الذين طغوا في البلاد |
| | | அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். |
|
6005 | 89 | 12 | فأكثروا فيها الفساد |
| | | அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். |
|
6006 | 89 | 13 | فصب عليهم ربك سوط عذاب |
| | | எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். |
|
6007 | 89 | 14 | إن ربك لبالمرصاد |
| | | நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். |
|
6008 | 89 | 15 | فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن |
| | | ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். |
|
6009 | 89 | 16 | وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن |
| | | எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான். |
|
6010 | 89 | 17 | كلا بل لا تكرمون اليتيم |
| | | அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. |
|