نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5963 | 87 | 15 | وذكر اسم ربه فصلى |
| | | மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். |
|
5964 | 87 | 16 | بل تؤثرون الحياة الدنيا |
| | | எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். |
|
5965 | 87 | 17 | والآخرة خير وأبقى |
| | | ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். |
|
5966 | 87 | 18 | إن هذا لفي الصحف الأولى |
| | | நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்- |
|
5967 | 87 | 19 | صحف إبراهيم وموسى |
| | | இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது. |
|
5968 | 88 | 1 | بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية |
| | | சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? |
|
5969 | 88 | 2 | وجوه يومئذ خاشعة |
| | | அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். |
|
5970 | 88 | 3 | عاملة ناصبة |
| | | அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். |
|
5971 | 88 | 4 | تصلى نارا حامية |
| | | கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். |
|
5972 | 88 | 5 | تسقى من عين آنية |
| | | கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். |
|