نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5943 | 86 | 12 | والأرض ذات الصدع |
| | | (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, |
|
5944 | 86 | 13 | إنه لقول فصل |
| | | நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். |
|
5945 | 86 | 14 | وما هو بالهزل |
| | | அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. |
|
5946 | 86 | 15 | إنهم يكيدون كيدا |
| | | நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். |
|
5947 | 86 | 16 | وأكيد كيدا |
| | | நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். |
|
5948 | 86 | 17 | فمهل الكافرين أمهلهم رويدا |
| | | எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. |
|
5949 | 87 | 1 | بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى |
| | | (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக. |
|
5950 | 87 | 2 | الذي خلق فسوى |
| | | அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். |
|
5951 | 87 | 3 | والذي قدر فهدى |
| | | மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். |
|
5952 | 87 | 4 | والذي أخرج المرعى |
| | | அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான். |
|