نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5915 | 85 | 6 | إذ هم عليها قعود |
| | | அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, |
|
5916 | 85 | 7 | وهم على ما يفعلون بالمؤمنين شهود |
| | | முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். |
|
5917 | 85 | 8 | وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد |
| | | (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. |
|
5918 | 85 | 9 | الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد |
| | | வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். |
|
5919 | 85 | 10 | إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق |
| | | நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. |
|
5920 | 85 | 11 | إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير |
| | | ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். |
|
5921 | 85 | 12 | إن بطش ربك لشديد |
| | | நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. |
|
5922 | 85 | 13 | إنه هو يبدئ ويعيد |
| | | நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான். |
|
5923 | 85 | 14 | وهو الغفور الودود |
| | | அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். |
|
5924 | 85 | 15 | ذو العرش المجيد |
| | | (அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். |
|