نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5890 | 84 | 6 | يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه |
| | | மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். |
|
5891 | 84 | 7 | فأما من أوتي كتابه بيمينه |
| | | ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, |
|
5892 | 84 | 8 | فسوف يحاسب حسابا يسيرا |
| | | அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். |
|
5893 | 84 | 9 | وينقلب إلى أهله مسرورا |
| | | இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். |
|
5894 | 84 | 10 | وأما من أوتي كتابه وراء ظهره |
| | | ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ- |
|
5895 | 84 | 11 | فسوف يدعو ثبورا |
| | | அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக- |
|
5896 | 84 | 12 | ويصلى سعيرا |
| | | அவன் நரகத்தில் புகுவான். |
|
5897 | 84 | 13 | إنه كان في أهله مسرورا |
| | | நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். |
|
5898 | 84 | 14 | إنه ظن أن لن يحور |
| | | நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். |
|
5899 | 84 | 15 | بلى إن ربه كان به بصيرا |
| | | அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். |
|