نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5875 | 83 | 27 | ومزاجه من تسنيم |
| | | இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும். |
|
5876 | 83 | 28 | عينا يشرب بها المقربون |
| | | அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள். |
|
5877 | 83 | 29 | إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون |
| | | நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள். |
|
5878 | 83 | 30 | وإذا مروا بهم يتغامزون |
| | | அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள். |
|
5879 | 83 | 31 | وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين |
| | | இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள். |
|
5880 | 83 | 32 | وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون |
| | | மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள். |
|
5881 | 83 | 33 | وما أرسلوا عليهم حافظين |
| | | (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே! |
|
5882 | 83 | 34 | فاليوم الذين آمنوا من الكفار يضحكون |
| | | ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள். |
|
5883 | 83 | 35 | على الأرائك ينظرون |
| | | ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள். |
|
5884 | 83 | 36 | هل ثوب الكفار ما كانوا يفعلون |
| | | காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.) |
|