نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5631 | 77 | 9 | وإذا السماء فرجت |
| | | மேலும், வானம் பிளக்கப்படும் போது- |
|
5632 | 77 | 10 | وإذا الجبال نسفت |
| | | அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது- |
|
5633 | 77 | 11 | وإذا الرسل أقتت |
| | | மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது- |
|
5634 | 77 | 12 | لأي يوم أجلت |
| | | எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன? |
|
5635 | 77 | 13 | ليوم الفصل |
| | | தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான். |
|
5636 | 77 | 14 | وما أدراك ما يوم الفصل |
| | | மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? |
|
5637 | 77 | 15 | ويل يومئذ للمكذبين |
| | | (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான். |
|
5638 | 77 | 16 | ألم نهلك الأولين |
| | | முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா? |
|
5639 | 77 | 17 | ثم نتبعهم الآخرين |
| | | பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம். |
|
5640 | 77 | 18 | كذلك نفعل بالمجرمين |
| | | குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்). |
|