نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5519 | 74 | 24 | فقال إن هذا إلا سحر يؤثر |
| | | அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. |
|
5520 | 74 | 25 | إن هذا إلا قول البشر |
| | | "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.) |
|
5521 | 74 | 26 | سأصليه سقر |
| | | அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன். |
|
5522 | 74 | 27 | وما أدراك ما سقر |
| | | "ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்? |
|
5523 | 74 | 28 | لا تبقي ولا تذر |
| | | அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது. |
|
5524 | 74 | 29 | لواحة للبشر |
| | | (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும். |
|
5525 | 74 | 30 | عليها تسعة عشر |
| | | அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். |
|
5526 | 74 | 31 | وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر |
| | | அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. |
|
5527 | 74 | 32 | كلا والقمر |
| | | (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக. |
|
5528 | 74 | 33 | والليل إذ أدبر |
| | | இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. |
|