نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5370 | 69 | 47 | فما منكم من أحد عنه حاجزين |
| | | அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. |
|
5371 | 69 | 48 | وإنه لتذكرة للمتقين |
| | | ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். |
|
5372 | 69 | 49 | وإنا لنعلم أن منكم مكذبين |
| | | ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். |
|
5373 | 69 | 50 | وإنه لحسرة على الكافرين |
| | | அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது. |
|
5374 | 69 | 51 | وإنه لحق اليقين |
| | | மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும். |
|
5375 | 69 | 52 | فسبح باسم ربك العظيم |
| | | ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக. |
|
5376 | 70 | 1 | بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع |
| | | (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். |
|
5377 | 70 | 2 | للكافرين ليس له دافع |
| | | காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. |
|
5378 | 70 | 3 | من الله ذي المعارج |
| | | (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). |
|
5379 | 70 | 4 | تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة |
| | | ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். |
|