نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5331 | 69 | 8 | فهل ترى لهم من باقية |
| | | ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? |
|
5332 | 69 | 9 | وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة |
| | | அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். |
|
5333 | 69 | 10 | فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية |
| | | அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான். |
|
5334 | 69 | 11 | إنا لما طغى الماء حملناكم في الجارية |
| | | தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம். |
|
5335 | 69 | 12 | لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية |
| | | அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்). |
|
5336 | 69 | 13 | فإذا نفخ في الصور نفخة واحدة |
| | | எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது: |
|
5337 | 69 | 14 | وحملت الأرض والجبال فدكتا دكة واحدة |
| | | இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் - |
|
5338 | 69 | 15 | فيومئذ وقعت الواقعة |
| | | அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். |
|
5339 | 69 | 16 | وانشقت السماء فهي يومئذ واهية |
| | | வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். |
|
5340 | 69 | 17 | والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية |
| | | இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். |
|