نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5323 | 68 | 52 | وما هو إلا ذكر للعالمين |
| | | ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை. |
|
5324 | 69 | 1 | بسم الله الرحمن الرحيم الحاقة |
| | | நிச்சயமானது. |
|
5325 | 69 | 2 | ما الحاقة |
| | | நிச்சயமானது எது? |
|
5326 | 69 | 3 | وما أدراك ما الحاقة |
| | | அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? |
|
5327 | 69 | 4 | كذبت ثمود وعاد بالقارعة |
| | | ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். |
|
5328 | 69 | 5 | فأما ثمود فأهلكوا بالطاغية |
| | | எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். |
|
5329 | 69 | 6 | وأما عاد فأهلكوا بريح صرصر عاتية |
| | | இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். |
|
5330 | 69 | 7 | سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية |
| | | அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். |
|
5331 | 69 | 8 | فهل ترى لهم من باقية |
| | | ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? |
|
5332 | 69 | 9 | وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة |
| | | அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். |
|