نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5319 | 68 | 48 | فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم |
| | | ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது: |
|
5320 | 68 | 49 | لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم |
| | | அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். |
|
5321 | 68 | 50 | فاجتباه ربه فجعله من الصالحين |
| | | ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான். |
|
5322 | 68 | 51 | وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون |
| | | மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர். |
|
5323 | 68 | 52 | وما هو إلا ذكر للعالمين |
| | | ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை. |
|
5324 | 69 | 1 | بسم الله الرحمن الرحيم الحاقة |
| | | நிச்சயமானது. |
|
5325 | 69 | 2 | ما الحاقة |
| | | நிச்சயமானது எது? |
|
5326 | 69 | 3 | وما أدراك ما الحاقة |
| | | அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? |
|
5327 | 69 | 4 | كذبت ثمود وعاد بالقارعة |
| | | ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். |
|
5328 | 69 | 5 | فأما ثمود فأهلكوا بالطاغية |
| | | எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். |
|