نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5294 | 68 | 23 | فانطلقوا وهم يتخافتون |
| | | எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர், |
|
5295 | 68 | 24 | أن لا يدخلنها اليوم عليكم مسكين |
| | | "எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது" (என்று). |
|
5296 | 68 | 25 | وغدوا على حرد قادرين |
| | | உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர். |
|
5297 | 68 | 26 | فلما رأوها قالوا إنا لضالون |
| | | ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள். |
|
5298 | 68 | 27 | بل نحن محرومون |
| | | (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.) |
|
5299 | 68 | 28 | قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون |
| | | அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார். |
|
5300 | 68 | 29 | قالوا سبحان ربنا إنا كنا ظالمين |
| | | "எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர். |
|
5301 | 68 | 30 | فأقبل بعضهم على بعض يتلاومون |
| | | பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர். |
|
5302 | 68 | 31 | قالوا يا ويلنا إنا كنا طاغين |
| | | அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம். |
|
5303 | 68 | 32 | عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون |
| | | "எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்). |
|