نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5056 | 56 | 77 | إنه لقرآن كريم |
| | | நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். |
|
5057 | 56 | 78 | في كتاب مكنون |
| | | பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. |
|
5058 | 56 | 79 | لا يمسه إلا المطهرون |
| | | தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். |
|
5059 | 56 | 80 | تنزيل من رب العالمين |
| | | அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. |
|
5060 | 56 | 81 | أفبهذا الحديث أنتم مدهنون |
| | | அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? |
|
5061 | 56 | 82 | وتجعلون رزقكم أنكم تكذبون |
| | | நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? |
|
5062 | 56 | 83 | فلولا إذا بلغت الحلقوم |
| | | மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - |
|
5063 | 56 | 84 | وأنتم حينئذ تنظرون |
| | | அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். |
|
5064 | 56 | 85 | ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون |
| | | ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. |
|
5065 | 56 | 86 | فلولا إن كنتم غير مدينين |
| | | எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - |
|