نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4944 | 55 | 43 | هذه جهنم التي يكذب بها المجرمون |
| | | அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). |
|
4945 | 55 | 44 | يطوفون بينها وبين حميم آن |
| | | அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். |
|
4946 | 55 | 45 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4947 | 55 | 46 | ولمن خاف مقام ربه جنتان |
| | | தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. |
|
4948 | 55 | 47 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4949 | 55 | 48 | ذواتا أفنان |
| | | அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை. |
|
4950 | 55 | 49 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4951 | 55 | 50 | فيهما عينان تجريان |
| | | அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். |
|
4952 | 55 | 51 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4953 | 55 | 52 | فيهما من كل فاكهة زوجان |
| | | அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. |
|