نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4928 | 55 | 27 | ويبقى وجه ربك ذو الجلال والإكرام |
| | | மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். |
|
4929 | 55 | 28 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4930 | 55 | 29 | يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن |
| | | வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். |
|
4931 | 55 | 30 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4932 | 55 | 31 | سنفرغ لكم أيه الثقلان |
| | | இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம். |
|
4933 | 55 | 32 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4934 | 55 | 33 | يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان |
| | | "மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. |
|
4935 | 55 | 34 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4936 | 55 | 35 | يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران |
| | | (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். |
|
4937 | 55 | 36 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|