نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4911 | 55 | 10 | والأرض وضعها للأنام |
| | | இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். |
|
4912 | 55 | 11 | فيها فاكهة والنخل ذات الأكمام |
| | | அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- |
|
4913 | 55 | 12 | والحب ذو العصف والريحان |
| | | தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. |
|
4914 | 55 | 13 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4915 | 55 | 14 | خلق الإنسان من صلصال كالفخار |
| | | சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். |
|
4916 | 55 | 15 | وخلق الجان من مارج من نار |
| | | நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். |
|
4917 | 55 | 16 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4918 | 55 | 17 | رب المشرقين ورب المغربين |
| | | இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. |
|
4919 | 55 | 18 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|
4920 | 55 | 19 | مرج البحرين يلتقيان |
| | | அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். |
|