نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4905 | 55 | 4 | علمه البيان |
| | | அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். |
|
4906 | 55 | 5 | الشمس والقمر بحسبان |
| | | சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. |
|
4907 | 55 | 6 | والنجم والشجر يسجدان |
| | | (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. |
|
4908 | 55 | 7 | والسماء رفعها ووضع الميزان |
| | | மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். |
|
4909 | 55 | 8 | ألا تطغوا في الميزان |
| | | நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. |
|
4910 | 55 | 9 | وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان |
| | | ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். |
|
4911 | 55 | 10 | والأرض وضعها للأنام |
| | | இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். |
|
4912 | 55 | 11 | فيها فاكهة والنخل ذات الأكمام |
| | | அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- |
|
4913 | 55 | 12 | والحب ذو العصف والريحان |
| | | தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. |
|
4914 | 55 | 13 | فبأي آلاء ربكما تكذبان |
| | | ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
|