نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4890 | 54 | 44 | أم يقولون نحن جميع منتصر |
| | | அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? |
|
4891 | 54 | 45 | سيهزم الجمع ويولون الدبر |
| | | அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். |
|
4892 | 54 | 46 | بل الساعة موعدهم والساعة أدهى وأمر |
| | | அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும். |
|
4893 | 54 | 47 | إن المجرمين في ضلال وسعر |
| | | நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர். |
|
4894 | 54 | 48 | يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر |
| | | அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்). |
|
4895 | 54 | 49 | إنا كل شيء خلقناه بقدر |
| | | நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். |
|
4896 | 54 | 50 | وما أمرنا إلا واحدة كلمح بالبصر |
| | | நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை. |
|
4897 | 54 | 51 | ولقد أهلكنا أشياعكم فهل من مدكر |
| | | (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? |
|
4898 | 54 | 52 | وكل شيء فعلوه في الزبر |
| | | அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. |
|
4899 | 54 | 53 | وكل صغير وكبير مستطر |
| | | சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். |
|