نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4841 | 53 | 57 | أزفت الآزفة |
| | | நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது. |
|
4842 | 53 | 58 | ليس لها من دون الله كاشفة |
| | | (அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை. |
|
4843 | 53 | 59 | أفمن هذا الحديث تعجبون |
| | | இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? |
|
4844 | 53 | 60 | وتضحكون ولا تبكون |
| | | (இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா? |
|
4845 | 53 | 61 | وأنتم سامدون |
| | | அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள். |
|
4846 | 53 | 62 | فاسجدوا لله واعبدوا |
| | | ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள். |
|
4847 | 54 | 1 | بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر |
| | | (இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. |
|
4848 | 54 | 2 | وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر |
| | | எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள். |
|
4849 | 54 | 3 | وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر |
| | | அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். |
|
4850 | 54 | 4 | ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر |
| | | அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன. |
|