نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4795 | 53 | 11 | ما كذب الفؤاد ما رأى |
| | | (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை. |
|
4796 | 53 | 12 | أفتمارونه على ما يرى |
| | | ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? |
|
4797 | 53 | 13 | ولقد رآه نزلة أخرى |
| | | அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார். |
|
4798 | 53 | 14 | عند سدرة المنتهى |
| | | ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே. |
|
4799 | 53 | 15 | عندها جنة المأوى |
| | | அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது. |
|
4800 | 53 | 16 | إذ يغشى السدرة ما يغشى |
| | | ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், |
|
4801 | 53 | 17 | ما زاغ البصر وما طغى |
| | | (அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை. |
|
4802 | 53 | 18 | لقد رأى من آيات ربه الكبرى |
| | | திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார். |
|
4803 | 53 | 19 | أفرأيتم اللات والعزى |
| | | நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? |
|
4804 | 53 | 20 | ومناة الثالثة الأخرى |
| | | மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) |
|