نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4774 | 52 | 39 | أم له البنات ولكم البنون |
| | | அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா? |
|
4775 | 52 | 40 | أم تسألهم أجرا فهم من مغرم مثقلون |
| | | அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா, |
|
4776 | 52 | 41 | أم عندهم الغيب فهم يكتبون |
| | | அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா, |
|
4777 | 52 | 42 | أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون |
| | | அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள். |
|
4778 | 52 | 43 | أم لهم إله غير الله سبحان الله عما يشركون |
| | | அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். |
|
4779 | 52 | 44 | وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم |
| | | வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். |
|
4780 | 52 | 45 | فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون |
| | | ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. |
|
4781 | 52 | 46 | يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون |
| | | அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். |
|
4782 | 52 | 47 | وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون |
| | | அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். |
|
4783 | 52 | 48 | واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم |
| | | எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, |
|