نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4729 | 51 | 54 | فتول عنهم فما أنت بملوم |
| | | ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர். |
|
4730 | 51 | 55 | وذكر فإن الذكرى تنفع المؤمنين |
| | | மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். |
|
4731 | 51 | 56 | وما خلقت الجن والإنس إلا ليعبدون |
| | | இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. |
|
4732 | 51 | 57 | ما أريد منهم من رزق وما أريد أن يطعمون |
| | | அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. |
|
4733 | 51 | 58 | إن الله هو الرزاق ذو القوة المتين |
| | | நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். |
|
4734 | 51 | 59 | فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون |
| | | எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம். |
|
4735 | 51 | 60 | فويل للذين كفروا من يومهم الذي يوعدون |
| | | ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான். |
|
4736 | 52 | 1 | بسم الله الرحمن الرحيم والطور |
| | | தூர் (மலை) மீது சத்தியமாக! |
|
4737 | 52 | 2 | وكتاب مسطور |
| | | ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! |
|
4738 | 52 | 3 | في رق منشور |
| | | விரித்து வைக்கப்பட்ட, |
|