نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4443 | 44 | 29 | فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين |
| | | ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை. |
|
4444 | 44 | 30 | ولقد نجينا بني إسرائيل من العذاب المهين |
| | | நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்; |
|
4445 | 44 | 31 | من فرعون إنه كان عاليا من المسرفين |
| | | ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான். |
|
4446 | 44 | 32 | ولقد اخترناهم على علم على العالمين |
| | | நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம். |
|
4447 | 44 | 33 | وآتيناهم من الآيات ما فيه بلاء مبين |
| | | அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது. |
|
4448 | 44 | 34 | إن هؤلاء ليقولون |
| | | நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்; |
|
4449 | 44 | 35 | إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين |
| | | "எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்." |
|
4450 | 44 | 36 | فأتوا بآبائنا إن كنتم صادقين |
| | | "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்." |
|
4451 | 44 | 37 | أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين |
| | | இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம். |
|
4452 | 44 | 38 | وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين |
| | | மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. |
|