نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4396 | 43 | 71 | يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون |
| | | பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்.) |
|
4397 | 43 | 72 | وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون |
| | | "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். |
|
4398 | 43 | 73 | لكم فيها فاكهة كثيرة منها تأكلون |
| | | "உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்" (எனக் கூறப்படும்). |
|
4399 | 43 | 74 | إن المجرمين في عذاب جهنم خالدون |
| | | நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். |
|
4400 | 43 | 75 | لا يفتر عنهم وهم فيه مبلسون |
| | | அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். |
|
4401 | 43 | 76 | وما ظلمناهم ولكن كانوا هم الظالمين |
| | | எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. |
|
4402 | 43 | 77 | ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون |
| | | மேலும், அவர்கள் (நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று கூறுவார். |
|
4403 | 43 | 78 | لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون |
| | | நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்). |
|
4404 | 43 | 79 | أم أبرموا أمرا فإنا مبرمون |
| | | அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான். |
|
4405 | 43 | 80 | أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون |
| | | அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள். |
|