نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4391 | 43 | 66 | هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون |
| | | தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா? |
|
4392 | 43 | 67 | الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين |
| | | பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். |
|
4393 | 43 | 68 | يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون |
| | | "என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). |
|
4394 | 43 | 69 | الذين آمنوا بآياتنا وكانوا مسلمين |
| | | இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். |
|
4395 | 43 | 70 | ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون |
| | | நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). |
|
4396 | 43 | 71 | يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون |
| | | பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்.) |
|
4397 | 43 | 72 | وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون |
| | | "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். |
|
4398 | 43 | 73 | لكم فيها فاكهة كثيرة منها تأكلون |
| | | "உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்" (எனக் கூறப்படும்). |
|
4399 | 43 | 74 | إن المجرمين في عذاب جهنم خالدون |
| | | நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். |
|
4400 | 43 | 75 | لا يفتر عنهم وهم فيه مبلسون |
| | | அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். |
|