نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4268 | 41 | 50 | ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ |
| | | எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் "இது எனக்கு உரியதே யாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்" என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம் மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம். |
|
4269 | 41 | 51 | وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض |
| | | அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான். |
|
4270 | 41 | 52 | قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد |
| | | "(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும் தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று (நபியே!) நீர் கேளும். |
|
4271 | 41 | 53 | سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد |
| | | நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? |
|
4272 | 41 | 54 | ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط |
| | | அறிந்து கொள்க நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள் அறிந்து கொள்க நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான். |
|
4273 | 42 | 1 | بسم الله الرحمن الرحيم حم |
| | | ஹா, மீம். |
|
4274 | 42 | 2 | عسق |
| | | ஐன், ஸீன், காஃப். |
|
4275 | 42 | 3 | كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم |
| | | (நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன். |
|
4276 | 42 | 4 | له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم |
| | | வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன். |
|
4277 | 42 | 5 | تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم |
| | | அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன். |
|