نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4021 | 38 | 51 | متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب |
| | | அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள். |
|
4022 | 38 | 52 | وعندهم قاصرات الطرف أتراب |
| | | அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள். |
|
4023 | 38 | 53 | هذا ما توعدون ليوم الحساب |
| | | "கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான். |
|
4024 | 38 | 54 | إن هذا لرزقنا ما له من نفاد |
| | | "நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). |
|
4025 | 38 | 55 | هذا وإن للطاغين لشر مآب |
| | | இது (நல்லோருக்காக) ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது. |
|
4026 | 38 | 56 | جهنم يصلونها فبئس المهاد |
| | | (அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது. |
|
4027 | 38 | 57 | هذا فليذوقوه حميم وغساق |
| | | இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும். |
|
4028 | 38 | 58 | وآخر من شكله أزواج |
| | | இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு. |
|
4029 | 38 | 59 | هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالو النار |
| | | (நரகவாதிகளின் தலைவர்களிடம்;) "இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்" (என்று கூறப்படும்). |
|
4030 | 38 | 60 | قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار |
| | | அதற்கு அவர்கள்; "அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!" என்று கூறுவர். |
|