نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3968 | 37 | 180 | سبحان ربك رب العزة عما يصفون |
| | | அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன். |
|
3969 | 37 | 181 | وسلام على المرسلين |
| | | மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. |
|
3970 | 37 | 182 | والحمد لله رب العالمين |
| | | வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்). |
|
3971 | 38 | 1 | بسم الله الرحمن الرحيم ص والقرآن ذي الذكر |
| | | ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக. |
|
3972 | 38 | 2 | بل الذين كفروا في عزة وشقاق |
| | | ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர். |
|
3973 | 38 | 3 | كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولات حين مناص |
| | | இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர். |
|
3974 | 38 | 4 | وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب |
| | | அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர். |
|
3975 | 38 | 5 | أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب |
| | | "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). |
|
3976 | 38 | 6 | وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد |
| | | "(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது" என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர். |
|
3977 | 38 | 7 | ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق |
| | | "வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்). |
|