نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3915 | 37 | 127 | فكذبوه فإنهم لمحضرون |
| | | ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள். |
|
3916 | 37 | 128 | إلا عباد الله المخلصين |
| | | அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.) |
|
3917 | 37 | 129 | وتركنا عليه في الآخرين |
| | | மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; |
|
3918 | 37 | 130 | سلام على إل ياسين |
| | | "ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக. |
|
3919 | 37 | 131 | إنا كذلك نجزي المحسنين |
| | | இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம். |
|
3920 | 37 | 132 | إنه من عبادنا المؤمنين |
| | | நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர். |
|
3921 | 37 | 133 | وإن لوطا لمن المرسلين |
| | | மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். |
|
3922 | 37 | 134 | إذ نجيناه وأهله أجمعين |
| | | அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் - |
|
3923 | 37 | 135 | إلا عجوزا في الغابرين |
| | | பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து. |
|
3924 | 37 | 136 | ثم دمرنا الآخرين |
| | | பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம். |
|