نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3882 | 37 | 94 | فأقبلوا إليه يزفون |
| | | (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள். |
|
3883 | 37 | 95 | قال أتعبدون ما تنحتون |
| | | அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?" |
|
3884 | 37 | 96 | والله خلقكم وما تعملون |
| | | "உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்." |
|
3885 | 37 | 97 | قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم |
| | | அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்." |
|
3886 | 37 | 98 | فأرادوا به كيدا فجعلناهم الأسفلين |
| | | (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம். |
|
3887 | 37 | 99 | وقال إني ذاهب إلى ربي سيهدين |
| | | மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்." |
|
3888 | 37 | 100 | رب هب لي من الصالحين |
| | | "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). |
|
3889 | 37 | 101 | فبشرناه بغلام حليم |
| | | எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். |
|
3890 | 37 | 102 | فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين |
| | | பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." |
|
3891 | 37 | 103 | فلما أسلما وتله للجبين |
| | | ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது |
|