نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3860 | 37 | 72 | ولقد أرسلنا فيهم منذرين |
| | | மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம். |
|
3861 | 37 | 73 | فانظر كيف كان عاقبة المنذرين |
| | | பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும். |
|
3862 | 37 | 74 | إلا عباد الله المخلصين |
| | | அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர. |
|
3863 | 37 | 75 | ولقد نادانا نوح فلنعم المجيبون |
| | | அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். |
|
3864 | 37 | 76 | ونجيناه وأهله من الكرب العظيم |
| | | ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். |
|
3865 | 37 | 77 | وجعلنا ذريته هم الباقين |
| | | மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். |
|
3866 | 37 | 78 | وتركنا عليه في الآخرين |
| | | மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். |
|
3867 | 37 | 79 | سلام على نوح في العالمين |
| | | "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. |
|
3868 | 37 | 80 | إنا كذلك نجزي المحسنين |
| | | இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம். |
|
3869 | 37 | 81 | إنه من عبادنا المؤمنين |
| | | நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். |
|