نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3848 | 37 | 60 | إن هذا لهو الفوز العظيم |
| | | நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும். |
|
3849 | 37 | 61 | لمثل هذا فليعمل العاملون |
| | | எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும். |
|
3850 | 37 | 62 | أذلك خير نزلا أم شجرة الزقوم |
| | | அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா? |
|
3851 | 37 | 63 | إنا جعلناها فتنة للظالمين |
| | | நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். |
|
3852 | 37 | 64 | إنها شجرة تخرج في أصل الجحيم |
| | | மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். |
|
3853 | 37 | 65 | طلعها كأنه رءوس الشياطين |
| | | அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். |
|
3854 | 37 | 66 | فإنهم لآكلون منها فمالئون منها البطون |
| | | நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். |
|
3855 | 37 | 67 | ثم إن لهم عليها لشوبا من حميم |
| | | பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும். |
|
3856 | 37 | 68 | ثم إن مرجعهم لإلى الجحيم |
| | | அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான். |
|
3857 | 37 | 69 | إنهم ألفوا آباءهم ضالين |
| | | நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். |
|