نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3831 | 37 | 43 | في جنات النعيم |
| | | இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - |
|
3832 | 37 | 44 | على سرر متقابلين |
| | | ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). |
|
3833 | 37 | 45 | يطاف عليهم بكأس من معين |
| | | தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். |
|
3834 | 37 | 46 | بيضاء لذة للشاربين |
| | | (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. |
|
3835 | 37 | 47 | لا فيها غول ولا هم عنها ينزفون |
| | | அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். |
|
3836 | 37 | 48 | وعندهم قاصرات الطرف عين |
| | | இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். |
|
3837 | 37 | 49 | كأنهن بيض مكنون |
| | | (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். |
|
3838 | 37 | 50 | فأقبل بعضهم على بعض يتساءلون |
| | | (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். |
|
3839 | 37 | 51 | قال قائل منهم إني كان لي قرين |
| | | அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். |
|
3840 | 37 | 52 | يقول أإنك لمن المصدقين |
| | | (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான். |
|