نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3826 | 37 | 38 | إنكم لذائقو العذاب الأليم |
| | | (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம். |
|
3827 | 37 | 39 | وما تجزون إلا ما كنتم تعملون |
| | | ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள். |
|
3828 | 37 | 40 | إلا عباد الله المخلصين |
| | | அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)- |
|
3829 | 37 | 41 | أولئك لهم رزق معلوم |
| | | அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. |
|
3830 | 37 | 42 | فواكه وهم مكرمون |
| | | கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்; |
|
3831 | 37 | 43 | في جنات النعيم |
| | | இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - |
|
3832 | 37 | 44 | على سرر متقابلين |
| | | ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). |
|
3833 | 37 | 45 | يطاف عليهم بكأس من معين |
| | | தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். |
|
3834 | 37 | 46 | بيضاء لذة للشاربين |
| | | (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. |
|
3835 | 37 | 47 | لا فيها غول ولا هم عنها ينزفون |
| | | அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். |
|