نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3287 | 28 | 35 | قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون |
| | | (அல்லாஹ்) கூறினான்; "நாம் உம் கையை உம் சகோதரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்." |
|
3288 | 28 | 36 | فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين |
| | | ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்; "இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்கள். |
|
3289 | 28 | 37 | وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون |
| | | (அப்போது மூஸா) கூறினார்; "அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்." |
|
3290 | 28 | 38 | وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين |
| | | இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்; "பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்" என்றே கருதுகின்றேன். |
|
3291 | 28 | 39 | واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون |
| | | மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள். |
|
3292 | 28 | 40 | فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين |
| | | ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும். |
|
3293 | 28 | 41 | وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون |
| | | மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள். |
|
3294 | 28 | 42 | وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين |
| | | இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள். |
|
3295 | 28 | 43 | ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون |
| | | இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது). |
|
3296 | 28 | 44 | وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين |
| | | மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை. |
|