نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3222 | 27 | 63 | أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون |
| | | கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். |
|
3223 | 27 | 64 | أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين |
| | | முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யாh? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்." |
|
3224 | 27 | 65 | قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون |
| | | (இன்னும்) நீர் கூறுவீராக் "அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்." |
|
3225 | 27 | 66 | بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون |
| | | ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர் அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர். |
|
3226 | 27 | 67 | وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون |
| | | மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்; "நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா? |
|
3227 | 27 | 68 | لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين |
| | | நிச்சயமாக, இ(ந்த அச்சறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டடே வருகிறது இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" (என்றுங் கூறுகின்றனர்). |
|
3228 | 27 | 69 | قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين |
| | | "பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்" என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. |
|
3229 | 27 | 70 | ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون |
| | | அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம். |
|
3230 | 27 | 71 | ويقولون متى هذا الوعد إن كنتم صادقين |
| | | இன்னும்; "நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)" என்றும் அவர்கள் கேட்கிறார்கள். |
|
3231 | 27 | 72 | قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون |
| | | "நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்" என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக. |
|