نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3144 | 26 | 212 | إنهم عن السمع لمعزولون |
| | | நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். |
|
3145 | 26 | 213 | فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين |
| | | ஆதலின் அல்லாஹ்வுடன் வேறெரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர். |
|
3146 | 26 | 214 | وأنذر عشيرتك الأقربين |
| | | இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! |
|
3147 | 26 | 215 | واخفض جناحك لمن اتبعك من المؤمنين |
| | | மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள் தாழ்த்தி (க் கனிவுடன்) நடந்துக்கொள்வீராக |
|
3148 | 26 | 216 | فإن عصوك فقل إني بريء مما تعملون |
| | | ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்; "நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்" என்று கூறிவிடுவீராக! |
|
3149 | 26 | 217 | وتوكل على العزيز الرحيم |
| | | இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக! |
|
3150 | 26 | 218 | الذي يراك حين تقوم |
| | | அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான். |
|
3151 | 26 | 219 | وتقلبك في الساجدين |
| | | இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்) |
|
3152 | 26 | 220 | إنه هو السميع العليم |
| | | நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன், மிக அறிபவன். |
|
3153 | 26 | 221 | هل أنبئكم على من تنزل الشياطين |
| | | எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? |
|